shadow

தீர்ப்பு வழங்கி 2 ஆண்டுகளுக்கு பின் சவுதி இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

1சவூதி அரேபியாவில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியா அரச குடும்பத்தில் சுமார் 1000 பேர் வரை உள்ள நிலையில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் இளவரசரான துர்கி பின் சவூத் அல் கபீர் என்பவர் தனது நண்பர் ஒருவரிடம் மோதலில் ஈடுபட்டதாகவும், இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் துப்பாக்கியால் தனது நண்பரை அவர் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது

இதன்பேரில் கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் கபீருக்கு மரண தண்டனை விதிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மரண தண்டனையை சவூதி அரசு நிறைவேற்றியுள்ளது.

நடப்பாண்டின் இதுவரையான காலத்தில் மொத்தம் 134 பேருக்கு, சவூதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, அரச குடும்பத்தின் வாரிசையும் விடாமல், தண்டனையை நிறைவேற்றியதன் மூலமாக, சர்வதேச அளவில், நீதி மற்றும் மனித மாண்பை காக்கும் அரசாக, சவூதி அரேபியா பெருமை பெற்றுள்ளது.

Leave a Reply