உலகக்கோப்பை கால்பந்து: மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி தோல்வி

உலகக்கோப்பை கால்பந்து: மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் உலகப் புகழ் பெற்ற வீரர் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்தது.

மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவுதி அரேபிய அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. கத்தாரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பத்தாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். ஆனால் அதன்பின் அவர் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்க முடியவில்லை

ஆனால் சவுதி அரேபியா அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இதனை அடுத்து அந்த அணி வெற்றி பெற்றது

அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அந்நாட்டின் கால்பந்து ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது