shadow

‘விஜய் 61’ படத்தில் இணைந்த ‘துப்பாக்கி’ காமெடியன்


இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவை இந்த படத்தின் வசூலை வெகுவாக குறைத்தது.

ஆனால் இதைப்பற்றிய எந்த கவலையும் இன்றி விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாம்.

விஜய்க்கு ஜோடியாம மீண்டும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் சத்யன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் நடிகர் சத்யன் ‘துப்பாக்கி’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply