shadow

பிரதமரை விமர்சித்த பிரபல நடிகரின் வீடு இடிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன்சின்ஹா சமீபத்தில் பாஜக தலைமை குறித்தும், பிரதமர் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சத்ருஹன்சின்ஹாவின் வீட்டில் உள்ள ஒரு பகுதி மும்பை மாநகராட்சியின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அந்த பகுதியினை இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். பிரதமரை விமர்சனம் செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையா? என்று சத்ருஹன்சின்ஹா ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *