ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் ஆராய்ச்சிக்காக ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி இருந்தது. பூமியின் மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், அந்த செயற்கைக்கோள் எதிர்பாராத விதமாக பழுது அடைந்து பூமியை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, 25 முதல் 45 பாகங்களாக பிரியும் என்றும், அவற்றில் பூமியில் விழும் பெரிய பாகத்தின் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பூமியிலிருந்து 113 மைல்கள் உயரத்தில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், பூமியை 88 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானிகள், இந்த செயற்கைக்கோள் பூமியில் எங்கே விழுமென்று கணிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாசாவின் செயற்கைகோளும், ரஷியாவின் செயற்கைகோளும் பழுதடைந்து பெசிபிக் கடலில் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply