shadow

இனி மாதம் ஒரு செயற்கை கோள். இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

isroதொழில்நுட்ப ரீதியாக இஸ்ரோவின் பலம் பன்மடங்கு உயர்ந்துள்ள மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், விஞ்ஞானிகளின் கடின உழைப்பினால் உருவாக்கப்பட்ட 2 செயற்கைக்கோள்களை இம்மாதத்தில் விண்ணில் ஏவ இருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று தொடங்கிய 5-வது விண்வெளி கண்காட்சி தொடங்கிய வைத்த கிரண்குமார் மேலும் கூறியதாவது:

இஸ்ரோவில் தயாரிக்கப்பட்ட இன் சாட் -3 டிஆர் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மார்க் -2 ராக்கெட் மூலம் வரும் 8-ம் தேதி செலுத்த இருக்கிறோம். இந்த செயற்கைக்கோளின் மூலம் பூமியின் தட்பவெப்பநிலை மாற றத்தைத் துல்லியமாக கண்டறியலாம். இதையடுத்து இம்மாத இறுதி வாரத்தில் ஸ்காட்சாட் செயற்கைக்கோளை அல்ஜீரிய செயற்கைக்கோளுடன் சேர்ந்து விண்ணில் ஏவ இருக்கிறோம்.

இந்த செயற்கைக்கோளின் மூலம் கடலின் மேற்பரப்பில் உருவாகும் புயல், கடல் அலை சீற்றம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். இஸ்ரோவின் வளர்ச்சியால் இனி ஆண்டுதோறும் 18 முதல் 24 வரையிலான செயற்கைக்கோள் களை உள்நாட்டிலே தயாரித்து விண்ணில் செலுத்த முடியும்.

இவ்வாறு கிரண்குமார் கூறினார்.

Leave a Reply