shadow

சசிகுமாரின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்

1சசிகுமார் நடித்த வெற்றிவேல் திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ‘கிடாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புதிய இசையமைப்பாளர் ஒருவரை சசிகுமார் அறிமுகப்படுத்தவுள்ளார். அவர்தான் தர்புகா சிவா என்பவர். இவர் இசையுலகிற்குத்தான் புதியவர் ஆனால் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான ‘ராஜரத்தினம்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வானொலியில் ஆர்ஜே, தனிப்பட்ட ஆல்பங்கள் ஆகியவற்றில் அனுபவமுள்ள தர்புகா சிவா, முதன்முதலாக பெற்றுள்ள இசையமைப்பாளர் வாய்ப்பை பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது.

Leave a Reply