பாதுகாப்பு கேட்டு திடீரென மனு அளித்த சசிகலா: என்ன காரணம்?

சசிகலா தரப்பில் இருந்து காவல்துறை ஆணையருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி சசிகலா செல்ல உள்ளார்.

அன்றைய தினம் தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் இருந்து காவல்துறை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.