shadow

போராட்டம் என்பது என் கையில் ஒட்டுகிற தூசி மாதிரி. சசிகலா

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் ஒருநாள் கூட மக்களை சந்திக்காத சசிகலா, தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்றவுடன் தினசரி மக்களையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். அவருடைய குரல்கூட எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் கடந்த சில நாட்களாகத்தான் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சற்று முன்னர் போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா ஆவேசமாக பேசினார்.

அவர் கூறியதாவது: ஜெயலலிதா இறந்த அன்றே என்னைத்தான் முதலமைச்சராக வேண்டும் என ஓபிஎஸ் உள்பட எல்லோரும் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் ஜெயலலிதா இறந்த துக்கத்தில் முதல்வர் பதவியை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டேன். நான்நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருக்கலாம், ஆனால் நான் அப்படி செய்யவில்லை. அதை நான் விரும்பவும் இல்லை.

அதிமுகவை பிரித்தாள ஓபிஎஸ் முயன்று வருகிறார். அவர் அதிமுகவிற்கு விசுவாசமாக இல்லை. இவரை போல 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள் நாங்கள். போராட்டம் என்பது என் கையில் ஒட்டுகிற தூசி மாதிரி. எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று சசிகலா ஆவேசமாக பேசினார்.

Leave a Reply