சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்

சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்

அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பு காரணமாக திடிரென மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன். இவர் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒன்றுக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் சசிகலாவின் அண்ணன் உள்பட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து பின்னர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.