பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து சசிகலா அறிக்கை!

பிரதமர் மோடிக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர வேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சசிகலா வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

இந்த கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் பாதியில் நாடு திரும்பி உள்ளதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்