shadow

ராஜினாமா செய்ய போவதில்லை. மதுரை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா ஆஜர்.

sasikala1கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக சிங்கபூர் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக இன்று அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகிறார். இதற்காக நேற்று நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சசிகலா புஷ்பா, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. டெல்லி நீதிமன்றம், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன். எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் சேர முடியாது என்பது சட்டம். வேறு கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம். எனது நடவடிக்கைகளை போக போக பொறுந்திருந்து பாருங்கள்.

பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு வேண்டும், மரியாதை வேண்டும். நீங்கள் (ஊடகம்) பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தான், நான் இங்கு வந்தேன். நீங்கள் சரியாக செய்ததால் தான் நான் இங்கு நடமாட முடிந்தது. உங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள், கலங்கப்படுத்தாதீர்கள். அது சுவாதியாக இருக்கட்டும், விஷ்ணு பிரியாவாகட்டும் யாரையும் களங்கப்படுத்தீர்கள். விஷ்ணு பிரியா என்னுடன் ஜ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்த பெண்.

பெண்களை கவுரப்படுத்தி மரியாதையுடன் அரசாங்க பணியை செய்ய வழிவிட வேண்டும். நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. கட்சியோ, இயக்கங்களோ, தலைவர்களோ தானாக இயங்க வேண்டும். சூரியன் தானாக இயங்குகிறது. பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என் போன்ற பெண்களுக்கும் சரி. இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்”

இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

Leave a Reply