shadow

எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. சசிகலா

பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படவில்லை என்று நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பிரச்சார செய்தித்தாளாக விளங்கும் டாக்டர். நமது எம்.ஜி.ஆர். இதன் தலைப்புச் செய்தியாக சசிகலா குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. அதில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது. இதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

அந்த குழுவினர் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அதற்கு அவர் சிறப்பு சலுகைகள் எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமை வகிக்கிறார். அவர் பெங்களூரு சிறையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

சிறையில் இருந்து சசிகலாவின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியானது கர்நாடக அரசிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. சிறையில் இருந்த 2 கைதிகளுக்கு தன் மீது அதிக அன்பு இருந்ததன் காரணமாக, அடிக்கடி தன்னை வந்து பார்த்து செல்வதாக கூறியுள்ளார். மற்றபடி சிறை விதிமுறைகளின் படியே நடந்து கொள்வதாக தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply