shadow

சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட் வரம்பில் வருமா? தமிழக அரசு கேள்வி

sasikalaஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவை விசாரணை செய்ய டெல்லி ஐகோர்ட் வரம்பு குறித்து தமிழக அரசு கேள்வி கேட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை நடந்தபோது தமிழக அரசு தரப்பில் இருந்து வாதாடிய தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத், வழக்குரைஞர் பி.யோகேஷ் கண்ணா ஆகியோர் “தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி நகரில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டை சசிகலா புஷ்பா அணுகியுள்ளார். அவர்களுக்கு எதிரான வழக்கு தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடிய வரம்பு டெல்லி ஐகோர்ட்டுக்கு உள்ளதா? என்பதை நீதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.

இவர்களுடைய வாதத்தை கேட்ட நீதிபதி முக்தா குப்தா, “ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த வாதங்களை தமிழக அரசு வரும் வியாழக்கிழமை முன்வைக்க அனுமதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

சசிகலா புஷ்பாவுடன் சமாதானமா? அதிமுக தலைமையின் அதிரடி

Leave a Reply