சசிகலா, இளவரசிக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதி!

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி முன்ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை சசிகலா அனுபவித்த போது அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது

இதுகுறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது

இந்த விசாரணையின்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்