shadow

ரஜினியை சந்தித்தாரா சரத்குமார்? சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரம்

rajiniதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் விஷால் அணியினர் மிகவும் சுறுசுறுப்பாக ஒரே நாளில் ரஜினி, கமல், விஜய், என முன்னணி நடிகர்களை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக சரத்குமார் அணி எவ்வித சுறுசுறுப்பும் இன்றி அமைதியாக உள்ளது. இந்நிலையில் நேற்று ரஜினியை சரத்குமார் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

ரஜினியுடன் ஆன சந்திப்பு குறித்து சரத்குமாரிடம் கேட்டபோது, “ரஜினியை சந்தித்தது உண்மைதான். இந்த சந்திப்பின்போது பல விசயங்கள் பேசினோம். நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும் ஒருசில கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம் என்று கூறியுள்ளார். ஆனால் தங்கள் அணிக்கு ஆதரவு கேட்டது குறித்தோ அதற்கு ரஜினி குறித்த பதில் குறித்த எவ்வித தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் ரஜினியுடன் சந்தித்த புகைப்படத்தையும் அவர் வெளியிடவில்லை. எனவே ரஜினி-சரத்குமார் உண்மையில் நடந்ததா? என்பது குறித்தே ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று விஷால் அணியினர் காமெடி நடிகர் விவேக்கையும் சந்தித்துள்ளனர். விவேக், விஷால் அணிக்கு ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்துள்ளாராம். ஏற்கனவே கமல்,குஷ்பு ஆகியோர் பகிரங்கமாக ஆதரவளித்துள்ள நிலையில் விவேக்கும் விஷாலுக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் விஷால் அணிக்கு ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply