கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் சரத்குமார்!

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது