shadow

sarathukumarநடிகர் சரத்குமார் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் துணிச்சலானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று காலை ஒரு சம்பவம் நடந்துள்ளது. நடிகரும் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று காலை தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராடன் நிறுவன அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராடன் அலுவலகம் அருகில் சாலையில் குறுக்கே வேன் ஒன்று நின்று கொண்டிருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

உடனே தனது காரில் இருந்து இறங்கிய சரத்குமார், வேன் எதனால் நிற்கின்றது என்று பார்த்தபோது வேன் ஓட்டுனர், வண்டியின் என்ஜின் பகுதியில் ஒரு குச்சியால் எதையோ அடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சரத்குமார் என்ன என்று விசாரித்தபோது, வேனின் எஞ்சினின் உள்ளே  பாம்பு இருப்பதாகவும், அது வெளியே வர மறுக்கிறது என்றும் கூறியுள்ளார்.

உடனே சரத்குமார், வேன் டிரைவரிடம் இருந்து குச்சியை வாங்கி தூர எரிந்துவிட்டு, என்ஜின் பகுதியில் பதுங்கியிருந்த பச்சைப்பாம்பை தனது கையால் பிடித்து அதை வெளியே கீழே வீசினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து சிதறி ஓடினர்.

துணிச்சலாக பாம்பை கையில் பிடித்து வீசிய நடிகர் சரத்குமாரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி சென்றிருக்கிறார்கள்.

Leave a Reply