ரூ.3 லட்சத்துடன் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறுவது தாமரையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 92 நாள் முடிவடைந்து இன்று 93வது நாள் நடைபெற உள்ள நிலையில் இன்று நடிகர் சரத்குமார் 3 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அதனால் ஒரு போட்டியாளர் மூன்று லட்ச ரூபாயுடன் வெளியேறிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தாமரை, பிரியங்கா, பாவனி, நிரூப், ராஜூ, அமீர், சிபி ஆகிய ஏழு பேர்கள் இருக்கும் நிலையில் இந்த ஏழு பேர்களில் யார் இந்த மூன்று லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு தாமரை வெளியேறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.