ஒரே படத்தில் சரத்குமார்-வரலட்சுமி

ஒரே படத்தில் சரத்குமார்-வரலட்சுமி

ஒரே படத்தில் தந்தை-மகன் நடித்துள்ள பல படங்களை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் சரத்குமாரும் அவருடைய மகள் வரலட்சுமியும் தற்போது ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.

பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கவுள்ள ‘பாம்பன்’ என்ற படத்தில் சரத்குமார் நாயகனாகவும், வரலட்சுமி ஒரு முக்கிய அதிரடி ஆக்சன் கேரக்டரிலும் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் வரலட்சுமிக்கு அதிரடி சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், அதற்காக அவர் ஒருவாரம் ஸ்டண்ட் இயக்குனருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, கோட்ட ஸ்ரீனிவாசராவ், இமான் அண்ணாச்சி, வின்செண்ட் அசோகன், இளவரசு உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Leave a Reply