வருடந்தோறும் பொங்கல் திருவிழாவை ஒட்டி தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதுபோல இவ்வருடமும் பாலமேடு, அலங்காநல்லூர், சிறாவயல் உள்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தது.

சிவகெங்கை மாவட்டம் சிறாவயலில் நேற்று ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுமார் 152 மாடுகள் களத்தில் இறங்கின. மாடுகளை அடக்க சுமார் 72 வீரர்கள் களமிறங்கினர். காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இறுதியில் நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் காண நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், திமுக எம்.எல்.ஏ பெரியகருப்பன் ஆகியோர் நேரில் வந்திருந்தனர். அவர்களை சிறப்புடன் வரவேற்ற ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் அவர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்தனர். ஜல்லிக்கட்டு முடியும்வரை சரத்குமாரும், பெரியகருப்பனும் அருகருகே அமர்ந்திருந்து சிரித்து பேசியபடியே இருந்தனர்.

Leave a Reply