சேலம் மாவட்டம் ஏற்காடு சட்ட மன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவாக இன்று காலை உடையாப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார் சரத்குமார். அப்போது அவர், திமுக ஆட்சியில் தமிழகத்துக்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை; தமிழகத்தின் மின் தேடைக்குத் தகுந்த மின் உற்பத்தித் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. கூடங்குளம் மின் உற்பத்தி திட்டத்தை முன்பேயே திறந்திருந்தால் மின் தேவை ஓரளவு பூர்த்தியாயிருக்கும். இதற்குக் காரணம் திமுகவும் காங்கிரஸுமே என்று குற்றம் சாட்டினார் சரத்குமார்.

Leave a Reply