நிர்மலாதேவியிடம் சந்தானம் இன்று விசாரணை

நிர்மலாதேவியிடம் சந்தானம் இன்று விசாரணை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு அவரை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் கவர்னர் நியமனம் செய்த சந்தானம் இன்று நிர்மலாதேவியை சிறையில் சென்று விசாரணை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய சந்தானம், ‘ நிர்மலாதேவியை விசாரணை செய்ய சிறைத்துறை அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் முருகன் மற்றும் மாணவர் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்

Leave a Reply