அப்பாவி சந்தானத்திற்கு திடீரென கொட்டிய கோடிக்கணக்கான பணம்!

சந்தானம் நடித்த சபாபதி என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலரில் அப்பாவியான சபாபதி என்ற கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளார்.

சபாபதியில் வாழ்க்கையில் விதி விளையாடியதால் திடீரென கோடிக்கணக்கான பணம் உள்ள பெட்டி கிடைக்கிறது.

இந்த பெட்டியில் உள்ள பணத்தை தொலைத்த கும்பல் அந்தப் பெட்டியைத் தேடி வருகிறார்களா? சபாபதி அவர்களிடம் மாட்டினாரா? அதன் பின் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைல்

சந்தானம், ப்ரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, எம்எஸ் பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சீனிவாசராவ் என்பவர் இயக்கி உள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது.