shadow

ஜி.வி.பிரகாஷ் படத்தில் முதல்முறையாக சந்தானம்

santhanamகோலிவுட்டின் பிரபல காமெடி நடிகரான சந்தானம், கடந்த ஆண்டு வெளியான ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் ஹீரோவாக நடித்தார். அந்த படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ சூப்பர் ஹிட் ஆகியதால் தொடரந்து இனிமேல் ஹீரோவாகவே நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் எம்.ராஜேஷ் நடித்த அனைத்து படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வந்த சந்தானம், தற்போது அவர் இயக்கி வரும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்தில் சந்தானம் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

Leave a Reply