shadow

1 (9)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்)   45/100

அகப்பட்டு கிட்டீங்கஅஷ்டமத்து சனீஸ்வரர் கிட்டே!

 எந்தத் துறையிலும் சாதிக்க விரும்பும் மேஷராசி அன்பர்களே!

நீங்கள் செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம் கொடுக்காதவர்கள். ஆனால் சற்று முன்கோபக்காரர்கள். வாக்கு  வன்மை நிறைந்தவர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி இதுவரை குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை கொடுத்திருப்பார். கருத்து வேறுபாடு  காரணமாக சிலரின் குடும்பம் பிரிந்திருக்கலாம். அலைச்சலும் ஏற்பட்டிருக்கலாம். தீயோர் சேர்க்கை உங்களை அவப்பெயருக்குள்ளாக்கி இரு க்கலாம். இதனால் பண விரயம் ஏற்பட்டு இருக்கும். இப்படி கெடு பலன்களை தந்த சனி இப்போது 8-ம் இடத்திற்கு சென்றுள்ளார். அஷ்டமத்தில்  சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில்  மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான  பலன் தான். ஆனால் இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் கோச்சாரப் பலனை பார்க்கும் போது  மற்ற கிரகங்களின் நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே சிறுசிறு பிணக்கு  வரலாம். சற்று விட்டுக் கொடுத்து போவது நன்மைஅளிக்கும். ஆனால் ராகுவால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் வெகுவாக குறையும். ஒருவர்  மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடை அனைத்தும் விலகும். எடுத்த காரியத்தில் வெற்றியை  காணலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குரு பகவானால் மன உளைச்சலும், உறவினர்  வகையில் வீண் பகையும் ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்துவதில் சிரமத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு சுபவிஷயத்தில் ÷ தவையற்ற தாமதம் ஆகலாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து செல்ல நேரிடலாம்.பணியாளர்கள் மேல்  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும். விடாமுயற்சி செய்தால் சம்பள உயர்வு,  பதவி உயர்வு போன்றவை கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் நீண்ட துõர பயணம் அடிக்கடி ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகலாம். பண  விரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும்.  அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.  ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது பயன் கொடுக்கும். விவசாயிகள் கால்நடை மூலம் சீரான வருமானம் பெறுவர். பயறு வகைகளில் நல்ல  மகசூலை பெறலாம். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே கிடைக்கும். புதிய வழக்குகள் எதிலும் சிக்கிக் கொள்வது நல்லதல்ல. பெண்கள்  மகிழ்ச்சிஉடன் காணப்படுவர். விருப்பம் போல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கேதுவால் பித்தம்,  மயக்கம் போன்ற உபாதை ஏற்பட வாய்ப்புண்டு.

2015 ஜுலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறிய பின்  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் கடின முயற்சியால் புதிய வீடு கட்டத்  தொடங்கலாம்  அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடி புக வாய்ப்பு வரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை  பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிணக்கு மறையும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பின்தங்கிய நிலை மறையும்.

2016ம் ஆண்டு நிலை பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம். எடுத்த காரியத்தை துரிதமாக முடிப்பீர்கள். மக்கள் மத்தியில் கவுரவம் மேம்படும். புதிய உறவு ஏற்படும். அவர்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா  என சென்று வருவீர்கள். குடும்பத்தோடு புண்ணியத் தலங்களுக்கு சென்று வரலாம். ஞானிகளின் ஆசியும் ஆதரவும் உங்கள் குடும்பத்துக்கு  கிடைக்கும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்கி அமோக லாபம் காண்பர். புதிய  தொழில் தொடங்கவும் வாய்ப்புண்டாகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில்  நல்ல மதிப்பெண் பெறுவர். விவசாயிகள் நல்ல வளத்தோடு காணப்படுவார்கள். பெண்கள் திருப்திகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன் பொருள் வந்து சேரும்.

2017 ஜூலை வரைகுடும்பத்தில் பல்வேறு முன்னேற்றம் தற்போது உருவாகும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்  நடந்தேறும். பணியில் மேம்பாடு காணலாம். அதிகாரிகள் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். தொழில், வியாபாரத்தில் அரசு வகையில்  எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். கலைஞர்கள்  அரசாங்க வகையில் விருது கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.  வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று சந்தோஷம்  காண்பர்.

2017 டிசம்பர் வரைகுடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி ÷ மற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் சக  ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், விய õபாரத்தில் எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. பண முதலீட்டைவிட, உழைப்பை நம்பித் தொழில் செய்வது நல்லது. கலைஞர்கள்  வாழ்வில் சிறப்படைவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.  மாணவர்கள் ஆர்வமுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி அடைவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க ÷ வண்டியிருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் எப்போதும் உற்சாகமாக  காணப்படுவர். அடிக்கடி விருந்து,விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் ஏற்படலாம்  கவனம்.

 பரிகாரம்!

சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். சிவன் கோயிலு க்கு பிரதோஷத்தன்று சென்று வாருங்கள். துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வணங்கி வாருங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில்  பத்ரகாளியை வணங்குங்கள்.

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2)  55/100

நல்லதைச் செய்தவரு கண்டகச் சனியா மாறிப் போனாரே!

எடுத்த முயற்சியை கச்சிதமாக செய்து முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே

 

நீங்கள் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட மாட்டீர்கள். இது வரை சனி பகவான்  உங்கள் ராசிக்கு 6-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக  நல்ல பணப்புழக்கத்தையும், எடுத்த காரியத்தில் வெற்றியையும் கொடுத்திருப்பார். மேலும் உங்களுக்கு அபார ஆற்றலை தந்து எதிரிகளை இருக்கும்  இடம் தெரியாமல் ஆக்கியிருப்பார். உடல் நலத்தையும் சிறப்பாக பாதுகாத்திருப்பார்.  இந்த நிலையில் சனி 7-ம் இடமான விருச்சிகத்திற்கு  செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதை கண்டகச்சனி என்பர். பேச்சு வழக்கில் கண்டச்சனி என்பது இதுதான். இப்போது அவரால் முன்பு ÷ பால் நற்பலனை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்னையை உருவாக்குவர். அலைச்சல்  அதிகரிக்க வாய்ப்புண்டு. வெளியூரில் வசிக்க நேரிடும்.  வேண்டாத நண்பர்களால் வாழ்வில் அவதி உண்டாகும் என்பது பொதுவான பலன்கள்.  இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. சனி சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் அவ்வப்போதுநன்மையை வாரி வழங்குவார்கள். 

2015ம் ஆண்டு நிலை பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்டு நடப்பது நல்லது. மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். உங்கள்  செல்வாக்குக்கு குறைவு எதுவும் உண்டாகாது. சிலர் வீண் மனக்குழப்பத்தில் இருப்பர். கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக்  கொடுக்கும்தன்மையும் மிகவும் அவசியம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும்.  புத்தாடை அணிகலன்களை மனம் போல வாங்கலாம்.  பணியாளர்களுக்கு இடமாற்றப் பீதி வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்க வாய்ப்பில்லை. யாரிடமும் கவனமுடன் பழகுவதால் பிரச்னை குறையும். புதிய வியாபாரத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.  கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டிஇருக்கும். ஆன்மிகப் பணியில் ஈடுபடுபவர்கள் மேன்மை அடைவீர்கள்.  தன்னலமற்ற சேவைக்கு நல்ல மரியாதையும், கவுரவமும் சமூகத்தில் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று நட ப்பதன் மூலம் வளர்ச்சியை பெற முடியும். விவசாயிகள் மானாவாரி பயிர்களின் மூலம் நல்ல வருமானம் காணலாம்.  வழக்கு விவகாரத்தின் முடிவு  சுமாராகவே இருக்கும். பெண்கள் குடும்பச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நன்மைய ளிக்கும். அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிபளுவை சுமக்க வேண்டியிருக்கும்.  புதிய ஆடை, நகைகள், அழகு சாதன பொருட்கள் வாங்க இடமுண்டு. உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதி ப்பட்டவர்கள் பூரண குணம் பெற்று நிம்மதி காண்பர்.

2015 ஜூலை 4ல் குருசிம்மத்திற்கு மாறுகிறார். அவர் மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்  2016ம்  ஆண்டு நிலைகுருகுடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார். குழந் தை பாக்கியம் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதையுடன் சமூகத்தில் வலம் வருவீர்கள். கடந்த காலத்தில் இருந்த  மன உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் உருவாகும். சிலரது வீட்டில் பொருட்கள்  திருட்டு போகலாம். போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். தொழில், வியாபாரத்தில் அதிகமாக  உழைக்க வேண்டிஇருக்கும். ஆனால் அதற்கான வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும். எந்த தொழில், விய õபாரத்திலும் அதிக பண முதலீடு செய்ய வேண்டாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரத்தான் செய்யும். அரசாங்க வகையில் உதவி கிடை ப்பதில் தாமதமாகலாம். பொருள் விரயமும் உருவாகலாம்.  கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசாங்க வகையில் பரிசு, பாராட்டு  கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியிருக்கும். மக்கள் நலப்பணிகளில் ஆர்வம் காட்டுவர்.  மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். விவசாயிகள் அதிக செலவு பி டிக்கும் பயிரை தவிர்ப்பது நல்லது. விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.  உறவினர்களின் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர். உடல்நலமும் சிறப்பாக இருப்பதால் மருத்துவச் செலவு குறையும். 

2017 ஜூலை வரை  குரு உங்கள் ராசிக்கு 5ல் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது.  பொதுவாக 6ல் இருக்கும் குரு உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும்  கவலை வேண்டாம். குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால்  உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் மனதில் பிறக்கும். பண வரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொ ருட்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூட வாய்ப்பில்லை. புதிய முயற்சியில் தாமதம் ஏற்படலாம்.  பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்களுக்கு  எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் தான் நல்ல முன்னேற்றம் காண்பர்.  பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரச் செலவை குறைப்பது புத்திசாலித்தனம். வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமையால்  அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். 

2017 டிசம்பர் வரை ராகு நன்மை வழங்கத் தொடங்குவார். ராகு செயலில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் உண்டாக்குவார்.  குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் வழங்குவார். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் உருவாகலாம். மறைமுக  எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் சீரான  பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து கொள்வது நல்லது. வியாபாரிகள் பண விஷய த்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி எடுக்க வேண்டிஇருக்கும்.  அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர். வாழ்வில் நல்ல வசதியுடன் இருப்பர். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க ÷ வண்டியிருக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். உடல்நலம்  சிறப்பாக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் பூரணமாக குணமடையும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். இதுவரை இருந்து  வந்த பயணப் பீதி மறையும்.

பரிகாரம்!

ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி  முன்னேற்றத்தைக் கொடுக்கும்.  ஞானிகள், சன்னியாசிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு  கொண்டைக் கடலை படைத்து வணங்குங்கள்.

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 80/100

வாங்கண்ணா! வணக்கங்கண்ணாநல்ல சான்செல்லாம் தாருங்கண்ணா!

எதையும் சிந்தித்து பேசும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

 

உங்கள் பேச்சில் சாமர்த்தியம் காணப்படும். சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு  செல்கிறார். அவர் ஐந்தில் இருக்கும் போது பல்வேறு இடையூறைக் கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி  இருப்பார். கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இருக்கும். இந்த நிலையில் தான் இப்போது சனி விருச்சி கத்தில் அடியெடுத்து வைக்கிறார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை  இருக்கும் இடம் தெரியாமல் பயந்தோடச் செய்வீர்கள். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர்  பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.

 2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில்மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்பு அனைத்தும் கிடைக்கும். தம்பதியினர் இடை யே அன்யோன்யம் மேம்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி  நல்லமுறையில் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். புதிய மனை வாங்கவோ, வீடு கட்டவோ  வாய்ப்புண்டாகும். சிலர் தற்போதுள்ள வீட்டை விட அதிக வசதி மிகுந்த வீட்டிற்கு குடிபுகுவர். வீட்டிற்கு அடிக்கடி உறவினர் வருகையும்,  அவர்களால் நன்மையும் கிடைக்கும்.பணியாளர்கள் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். ÷ வலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி ஆர்வம் பிறக்கும். பணியிடத்தில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக  குறையும். புதிய பதவி வர வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகை, விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் புதிய முய ற்சியால் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஆதரவு சீராக கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் நல்ல சம்பளத்தில்  பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவர். சிலர் வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  வாடிக்கையாளர்கள் உங்களின் மீது நன்மதிப்பு வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவி அவ்வப்போது கிடைக்கும். கலைஞர்கள் பின்தங்கிய  நிலையில் இருந்து விடுபடுவர். புகழ், பாராட்டு வந்து சேரும். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நீண்ட  காலமாக எதிர்பார்த்த பதவி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். மக்கள் நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர். மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன்  ஈடுபடுவதால் நல்ல வளர்ச்சி பெறுவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.  வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலருக்கு உண்டாகும். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். விருப்பம் போல புதிய  சொத்துக்களை வாங்கலாம். மாற்றுப்பயிர் சாகுபடியால் அதிக ஆதாயம் கிடைக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். புத்தாடை, நகை ஆபரண ங்கள் வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உயர்நிலையை அடைவர். விருந்து, விழா என சென்று மகிழலாம். உடல்நலம் சீராக இருந்தா லும், அவ்வப்போது கேதுவால் பித்தம், மயக்கம் தொடர்பான உபாதை ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.  உறவினர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று மகிழ்வர்.

2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறுகிறார். இந்தக் காலத்தில் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள்  நிலையில் மாற்றம் ஏற்படும்.

2016ம் ஆண்டு நிலை பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாகும். அதே நேரம் செலவும்  அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில்தடை உருவாகலாம். புதிய வீடு  வாகனம் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்களுக்கு கடந்த காலம்  போல் சலுகை கிடைக்க வாய்ப்பிருக்காது. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டிப் பறிக்கப்படலாம் கவனம். அதிகாரிகளிடம் அனுசரித்து ÷ பாவது நன்மையளிக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழிலை தொடங்க இது  உகந்த காலம் அல்ல. புதிய முயற்சிகளை இப்போதைக்கு கைவிடுவது நல்லது. கலைஞர்கள் சுமாரான வளர்ச்சி நிலையில் இருப்பர். விடாமுயற்சி  எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற ஆதாயம்  கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். வீட்டுச்செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. கேதுவால் பொருள் விரயம்  வரலாம். உடல் ஆரோக்கியம் குறையலாம்.

2017 ஜூலை வரை இந்த காலத்தில் பொருளாதார நிலை வளர்ச்சிஅடையும். நீங்கள் எடுத்த முயற்சி நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் எளிதில்  முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில்  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு  குடிபுகவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் இருந்து வந்த  கருத்துவேறுபாடு மறையும். பணியாளர்களின் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். எதிர்பார்த்த புதிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில்  லாபத்துக்கு குறையிருக்காது சிலர் தொழில், வியாபாரம் விஷயமாக வெளியூர், வெளி நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அறிவை  பயன்படுத்தி முதலீடு இல்லாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அரசாங்க வகையில் இருந்த பிரச்னை மறையும். மாணவர்கள் சிறப்பான பலனை  பெறலாம். விரும்பிய கல்விநிறுவனத்தில் படிக்கும் வாய்ப்புண்டாகும். கலைஞர்கள் அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கப்  பெறுவர். அரசியல்வாதிகள் தங்கள் பணியில் சிறப்படைவர். விவசாயிகள் புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். விளைபொருளுக்கு நல்ல விலை  கிடைக்கப் பெற்று அதிக வருமானத்தைக் காண்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்கள் குதுõகலமான பலனை காண்பர்.

2017 டிசம்பர் வரை கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டு  கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு வீட்டில் பொருள் திருட்டு போக வாய்ப்புண்டு. பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது  நன்மைஅளிக்கும். சிலருக்கு விரும்பாத இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று  வருவீர்கள். மறைமுக எதிரிகளால் இடையூறு அவ்வப்போது வரலாம். புதிய முதலீடு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு  விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் ஆசிரியர்களின்  அறிவுரையை கேட்டு நடக்கவும்.விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள்  குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு, கேது அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச்  செல்லுங்கள். திருநாகேஸ்வரம், திருபெரும்பள்ளம் அல்லது காளகஸ்தி ஆகிய தலங்களுக்குச் செல்வது நன்மையளிக்கும். சனிக்கிழமை பெருமாள்  கோயிலுக்குச் சென்று வாருங்கள்

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)   60/100.

அர்த்தாஷ்டம சனி விலகியாச்சு! இனி எல்லாம் சுகமே!

தன்னம்பிக்கை மிக்கவராகத் திகழும் கடக ராசி அன்பர்களே!

 

குடும்பத்தாரிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் நீங்கள் சாமர்த்தியமாக பேசும் திறமை படைத்தவர்கள். இதுவரை சனி 4 ல் இருந்து  பல்வேறு பிரச்னைகளை தந்திருப்பார். குறிப்பாக உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல்நிலை பாதிப்படைந்து உங்களை  கவலைக்குள்ளாக்கி இருக்கலாம். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. 5-ம் இடத்திற்கு செல்வது சிறப்பானது என்று சொல்ல முடியாது.  ஆனாலும் 4-ம் இடத்தில் இருந்தது போன்ற பின் தங்கிய பலனை தற்போது தரமாட்டார். 5-ல் சனி இருக்கும் போது குடும்ப பிரச்னைகளை தருவார்  என்பது பொது விதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் நன்மைகள் கிடைக்கும்.  அதே நேரம் குரு, ராகு, கேது போன்ற மற்ற கிரகங்களாலும் நன்மைகள் கிடைக்கும். மொத்தத்தில் அர்த்தாஷ்டம சனி விலகி விட்டதால், ஓரளவு  சுபபலன்கள் நடக்க துவங்கி விட்டதை நீங்கள் உணரலாம். 

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது மனக்கசப்பு வரத்தான்  செய்யும். ஆனால் அவை உங்களின் மென்மையான அணுகுமுறையால் விலகி விடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  நல்லமுறையில் கைகூடி வரும். ஆனால், அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகளால் கடன் வாங்கும் சூழ் நிலை உருவாகலாம்.  பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கவே செய்யும். உழைப்புக்கு தகுந்த வருமானம்  கிடைக்காமல் போகாது.  அதிர்ஷ்டவசமாக சிலருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றம் ஏற்படுமோ என்ற  பயமும் தொடர்ந்து கொண்டிருக்கலாம்.  தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அதிகமாக அலைச்சல் இருக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உ ருவாகலாம். அரசாங்கத்தால் உதவி அவ்வளவு எளிதாக கிடைக்காது. மறைமுக எதிரிகளால் இடையூறு அவ்வப்போது தலை துõக்கினாலும் அதை  உங்களின் புத்திசாலித்தனத்தால் எளிதில் முறியடிப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பொருள் விரயம் ஏற்படலாம். இயன்ற அளவு சிக்கனமாக இருப் பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரம் எதிர்பார்த்த புகழும், நற்பெயரும் உங்களை  வந்து சேரும். அரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். பொதுமக்கள் மத்தியில் முன்பை விட தற்போது நன்மதிப்பு அடைவர்.  மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபட முயற்சிப்பது நல்லது. குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி  படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் அறிவுரையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் காணலாம். வழக்கறிஞர், ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள்  தொழிலில் சிறந்து விளங்குவர். பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் அடைவர். விவசாயிகள் அளவுக்கதிகமான பண முதலீடு செய்வது கூடாது. வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே கிடைக்கும். ஆனால், அதிக பாதகம் ஏற்பட வாய்ப்பில்லை. பெண்கள் விருப்பம் போல ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. உடல் நலம் சிறப்படையும். 

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். துணிச்சல் மனதில் பி றக்கும். அதிர்ஷ்டவசமாக வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதித் திட்டம் உங்களிடம்  எடுபடாமல் போகும். அவர்கள் சரணடையும் நிலையும் உருவாகும்.

2016 ம் ஆண்டுநிலை  குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் தாமதம் உருவாகலாம். ஆனால் குருவின் பார்வை சாதகமாக  இருப்பதால் விடாமுயற்சி மூலம் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு உண்டாக இடமுண்டு.  பணியாளர்கள் சுமாரான  நிலையில் இருந்து வருவர். பணிச்சுமையால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது  நல்லது. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் மிதமான லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு  அனுகூலத்தை கொடுக்கும். கலைஞர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.  மாணவர்கள்  முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயத்தில் போதிய வருவாயை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும்.  மானாவாரி பயிர்களில் விளைச்சல்அதிகரிக்கும். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட்டு வருவர். 

2017 ஜூலை வரை குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட்டாலும் முடிவு  சுபமாக அமையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு அடிக்கடி உருவாகும். பணிய õளர்களுக்கு கடந்த காலம் போல் பணியிடத்தில் சுதந்திரம் இல்லாமல் போகலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர  வேண்டிய பதவி உயர்வு தட்டி பறிக்கப்படலாம். வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழிலை தொடங்க  இது உகந்த காலம் அல்ல. புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மையளிக்கும். சிலர் வேலை விஷயமாக  குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருந்து வருவர். சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.  மாணவர்கள் கடின முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைக் காண்பர். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வ ருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. 

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் பிரச்னை வரத்தான் செய்யும். சற்று விலகி இருப்பது நல்லது.  குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது அவசியம். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். பணியாளர்களுக்கு  அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். பணியில் தடைகள், திருப்தியின்மை ÷ பான்றவை மறையும். வேலையில் உற்சாகம் பிறக்கும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க  வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்கும். அரசிய ல்வாதிகள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். தொண்டர், மக்களின் நன்மதிப்புக்குரியவராவர். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி  கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் அதிக முத லீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரம் சுமாராகத் தான் இருக்கும். சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது  நல்லது. பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். தாய் வீட்டில் இருந்து வெகுமதி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு  மணவாழ்வு விரைவில் கைகூடும்.அக்கம் பக்கத்தினர் உங்களை பெருமையாக பேசுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம்  அடைவர். உடல் நலத்தைபொறுத்தவரை ஆரோக்கியம் சீராகும். கேதுவால் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் மறைந்து விடும்.

பரிகாரம்!

விநாயகரையும், அம்பிகையையும் வணங்கி வாருங்கள். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வாருங்கள்.  அல்லது அருகில் இருக்கும் புற்றுள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் உங்கள்  துயர் அனைத்தும் நொடியில் நீங்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)  55/100 

சனீஸ்வரரே! நீங்க நல்லவராகெட்டவரா?

திறமையுடன் செயல்பட்டு வெற்றி காணும் சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக பொருளாதார வளத்தை  கொடுத்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பார். இந்த நிலையில் சனி தற்போது 4-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கிறார். இது  அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் வீண் விரோதத்தை உண்டாக்குவார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகலாம். பெற்றோரைப் பிரிந்து செல்லும் நிலையும் ஏற்படலாம்.- இவை எல்லாம்  பொதுவான பலன். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பான  இடத்தில் விழுகிறது. இது உங்களுக்கு மிகவும் சாதகமான பலனைக் கொடுக்கும். மொத்தத்தில், அவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று அறிய õத முடியாத அளவுக்கு நல்லதும் சிரமமுமாய் மாறி மாறி வரும்.

2015ம் ஆண்டு நிலை சீரான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் காலமாக அமையும். எடுத்த செயலை முடிக்க அவ்வப்போது தடைகள் குறுக்கிட்டாலும்,  முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் இருக்கும். எனவே அனாவசிய செலவைக் குறைக்கவும்.  மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். சனீஸ்வரரின் பார்வையால் உங்கள் நிலை சற்றும் தாழ்ந்து ÷ பாகாது. எதையும் சமாளித்து முன்னேற அவர் கருணை காட்டுவார். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். அவ்வப்போது சிறு சண்டை  சச்சரவு ஏற்பட வாய்ப்பிருந்தாலும், குடும்ப அமைதிக்கு பங்கம் உண்டாகாது. ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். சுப நிகழ்ச்சி நடத்துவதில்  தாமதம் ஏற்படலாம்.  பணியில் இருப்பவர்கள் கடந்த காலத்தைப் போல நற்பலன் அதிகமாக இருக்கும் என்று எண்ணுவது கூடாது. முக்கியமான  பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைப்பது நல்லதல்ல. சிலருக்கு திடீர் இட, ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டாகும். தொழில், வியாபாரத்தில்  கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். புதிய முதலீடு விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். யாரையும் நம்பி பணத்தை ஒப் படைக்க வேண்டாம்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க விடாமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி  கிடைப்பது எளிதான விஷயமல்ல. மாணவர்கள் முயற்சி எடுத்து படிப்பது அவசியம். பெற்றோர் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும். விவசாயிகள் அதிக முதலீடு செய்யும் பயிர்களைத் தவிர்க்கவும். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை அமையாது.  பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.  உஷ்ணம், தோல், தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம். கவனம் தேவை.

குரு 2015 ஜூலை 4ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுபலனாகக்  கூறப்படுவதுண்டு. குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்னை உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதே÷ பால் அக்கம்பக்கத்தாரிடமும் அனாவசியமான பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போக வாய்ப்புண்டு. பணியாளர்களுக்கு  பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராமல் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் இருக்கும்.   அரசாங்க வகையில் சாதகமான பலன் கிடைக்காது. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நன்மைஅளிக்கும். கலைஞர்கள் திருப் திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது அவசியம். விவசாயி கள் மிதமான லாபம் கிடைக்கப் பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

2016ம் ஆண்டு நிலை குரு உங்கள் ராசிக்கு 2ல் செல்வது சிறப்பு. அவரால் இனி நன்மை அதிகரிக்கும். ராகுவும் கேதுவும் இடம் மாறுகிறார்கள்.  7-1-2016 அன்று ராகு கன்னியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.7-1-2016 அன்று கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கு மாறுகிறார். இருவரும்  சாதகமற்ற நிலையில் தான் இருக்கிறார்கள்.  இந்த காலக்கட்டத்தில் குருவால் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். உங்களது ஆற்றல் அதிகரிக்கும்.  எடுத்த செயலைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.  கணவன், மனைவி  இடையே அன்பு பெருகும். அடிக்கடி விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். உறவினர்களால் நன்மை  கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். நிர்வாகம், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் இழந்த பதவி மீண்டும்  கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி அடியோடு மறையும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டியால் சிரமம் ஏற்பட்டிருக்கலாம்.  கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயப் பணி சிறக்கும். நெல், போதுமை,  கொண்டை கடலை, கேழ்வரகு, எள் போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை கொடுக்கும். பெண்கள் குடும்பத்தில் சிறப்பான நிலையை அடைவர்.  புதிதாக மணமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.

2017 ஜூலை வரை கடந்த காலத்தைப் போல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. முக்கிய பொறுப்புகளை  குடும்ப பெரியோர்களிடம் ஒப்படைப்பது நல்லது. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது அவசியம். பணியில் சிலருக்கு ÷ வலையில் வெறுப்பு வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவதால் பிரச்னை குறையும். வியாபாரத்தில் அலைச்சலும், பணிச்சுமையும் இ ருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டு மே தேர்ச்சி பெற முடியும். விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சுமாராக  இருக்கும். கால்நடை  வளர்ப்பின் மூலம் ஓரளவு  வருமானம் கிடைக்கும்.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு பலப்படும். உறவினர்  வகையிலும் பிரச்னை நீங்கி இணக்கம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியில் அவ்வப்போது பிரச்னையைச் சந்திக்க ÷ வண்டியிருக்கும். வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க வகையில் எந்த

சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. கலைஞர்கள் விடாமுயற்சி மூலம் புதிய ஒப்பந்தங்களை பெற இயலும். அரசியல்வாதிகள் பிரதிபலனை  எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அவசியம். இல்லாவிட்டால் ஆசிரியர் கண்டிப்புக்கு ஆளாக ÷ நரிடலாம். விவசாயிகள் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். புதிய நிலம் வாங்கும்  முயற்சி நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். பெண்கள் குடும்பத்தில் செல்வாக்குடன் திகழ்வர். ஆடம்பர பொருட்களை வா ங்குவீர்கள். புத்தாடை, ஆபரணங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சீராகும். மரு த்துவச் செலவு குறையும்.

பரிகாரம்!

ராகு, சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வாருங்கள். மகாலட்சுமியை வணங்குவதால் நன்மை  உண்டாகும். ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு வாருங்கள்.  சதுர்த்தியில் விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். எள்சாதத்தை காக்கைக்கு

இடு ங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற அளவுக்கு உதவுங்கள்.

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)   75/100

கிளம்பிட்டாரு!அப்பாடி! நிம்மதிபெருமூச்சு விட்டுக்கிறோம்!

மென்மையான அணுகுமுறையைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

 

உங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான பிரச்னைகளை சனிபகவான் தந்திருப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர், உங்கள்  ராசியில் இருந்து 3-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது மிக சிறப்பான காலம். இவ்வளவு நாளும் ஏழரைச் சனியின் பிடியில் இருந்த நீ ங்கள், இப்போது அதிலிருந்து பூரணமாக விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிடுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களை தர காத்தி ருக்கிறது. ஏழரை சனி காலத்தில் நீங்கள் பட்ட துன்பத்தை சொல்லி மாளாது. தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலை உங்களைத் தொடர்ந்திருக்கும்.  குடும்பத்திலும் பிரச்னை தலை தூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றிருக்க கூடும். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவு,  பொருள் இழப்பு என்று நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் இப்போது சனி 3-ம் இடத்துக்கு மாறுவதன் மூலம் முயற்சி அனைத்தையும்  வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் பன்மடங்கு லாபம் அதிகரிக்கும்.

 

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவர் பொருள் விரயத்தையும், வீண் அலைச்சலையும்  ஏற்படுத்தலாம். ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்துவதில் தாமதம் ஆகலாம். கணவன், மனைவி  இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர் வகையிலும் அதிக நெருக்கத்தை தவிர்ப் பது அவசியம். முயற்சி எடுத்தால் புதிதாக வீடு, மனை வாங்கும் எண்ணம் நினைவேறும். பணியாளர்கள் கடந்த காலத்தை போல் பலனை எதிர்ப் பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் வேலைகளை வேறு நபரிடம் ஒப்படைக்க ÷ வண்டாம். தொழில், வியாபாரத்தில் பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க  வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கலைஞர்கள் விடா முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிய ல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை  தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் சீரான நிலையில் இருப்பர். குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக்  கொடுத்து போகவும்.

 

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும். கணவன், மனைவி இடையே இருந்த பிணக்கு மறைந்து அன்பு மேம்படும்.  புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய வாகனம் எண்ணம்  கை கூடும். பணியில் புதிய தெளிவு பிறக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர். வேலை இன்றி இருப் பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பகைவர்கள் உங்களின் நற்குணத்தை  உணர்ந்து சரணடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவை கிடைக்கப்  பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனைப் பெற்று மகிழ்வர். பொது மக்களிடையே நற்பெயர் உண்டாகும். எதிர்பார்த்த புதிய பதவி  கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் புதிய  சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு அமையும். கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மனமகிழ்ச்சியுடன் காணப் படுவீர்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். வக்கீல் தொழில் சிறப்பாக நடக்கும். பெண்கள் குடும்பத்தில்  உன்னத நிலையைப் பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் வந்து சேரும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். மனம்  போல ஆடை, அணிகலன், ஆடம்பர பொருள் அதிகமாக வாங்குவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு கைகூடும். புதுமணத் தம்பதிக்கு  புத்திர பாக்கியம் உண்டாகும். 

 

2016ம் ஆண்டுநிலை குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் அமைதிக்கு பங்கம் உண்டாகாது. சுபநிகழ்ச்சிகளை  ஆடம்பரமாக நடத்துவதன் மூலம் கடன் பட நேரிடலாம். பணியாளர்களுக்குப் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே  இருக்கும். இடமாற்றம் ஏற்படுமோ என்ற பயம் தொடரத்தான் செய்யும். வியாபாரிகளுக்கு ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். பொருள்  விரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். புதிய ஒப்பந்தம் பெறுவதிலும் விடாமுயற்சி தேவை.  மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. பெண்கள் ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

 

2017 ஜூலை வரை குடும்பத்தில் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் நன்மை உண்டாகும். சிலரது வீடுகளில் பொரு ட்கள் திருட்டு போகலாம். பணியாளர்கள் சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு  நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசாங்க வகையில் நன்மையான போக்கு உண்டாகும். விரிவாக்கம் செய் வதற்கான கடன் வசதி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான  நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். பெண்கள் குடும்பத்தில் செல்வாக்கான நிலை அமையப் பெறுவர். புதுமணத் தம்பதி யருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை மனம் போல வாங்கலாம். கணவன்,மனைவி இடையே  அன்னியோனியம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும்.வியாபாரம்  கடந்த காலத்தைப் போல நஷ்டத்தை உண்டாக்காது. ஓரளவு சேமிப்பு

இருக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்கள் சிறந்து விளங்கும். கலைஞர்கள் சிறப்பான  முறையில் வாழ்வர். அரசியல்வாதிகள் பலவிதத்திலும் மேம்பாடு அடைவர். விரும்பிய விதத்தில் பதவியும், பணமும் கிடைக்கும். பண வரவு சிற ப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடை, தோல்வி இனி இருக்காது. பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.  மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புண்டு. விவசாயிகள் எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.  விவசாயத்தை நவீனப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு  விவகாரத்தில் சாதகமாக நிலை உருவாகும். பெண்கள் குதுõகலமான பலனைக் காண்பர். உங்கள் சாதுரியத்தால் தடைகளை எளிதில் முறியடித்து  வெற்றி காண்பீர்கள். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். கணவரின் அன்பு கிடைக்கும்.

பரிகாரம்!

கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச் சென்று வரலாம். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறலாம்.  துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். கிருஷ்ணரை வழிபடுவது மேன்மையளிக்கும். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர்ச்சாதம் படைத்து வழிபடலாம்.  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)  50/100

இன்னும் மூணே வருஷம் கண்ணைப் பொத்திட்டுகழிச்சிடுங்க!

எதையும் ஆணித்தரமாக பேசும் தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

யாரிடமும் அதிகமாக நெருங்கி பழக மாட்டீர்கள். அனாவசியமாக யார் விஷயத்திலும் தலையிட மாட்டீர்கள். உங்களுக்கு சனிபகவான் கடந்த சில  ஆண்டுகளாகத்தான் அளவுக்கு அதிகமான சிக்கலையும், பிரச்னைகளையும் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் உங்கள் ராசியில் இருந்து அதிக அலைச்சலை உருவாக்கி இருப்பார். வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் தொல்லைகளே மிஞ்சி இருக்கும். உங்கள் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டார்கள். வீண் அலைச்சல் உங்களுக்கு மனச்சோர்வை தந்திருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க வேண்டியதிருக்கும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனாலும், மேலே சொன்ன பிற்போக்கான பலன்கள் இனி நடக்காது. ஏழரை சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது

குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். பொருட்கள் களவு கொடுக்க நேரிடும். பணஇழப்பு ஏற்படும். இது பொதுவான விதி. ஆனால் மற்றைய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால், வரும் இரண்டரை ஆண்டு காலம் அவ்வளவு கடுமையாக அமையாது. காரணம், இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரத் தயங்க மாட்டார். மேலும் சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். எப்படியோ, இன்னும் மூன்று வருடங்களைக் கழித்து விட்டால் ஏழரை அகலும் காலம் வந்து விடும்.

 

2015ம் ஆண்டு நிலைகுடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும்.  அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு குறையும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு.  அதற்காக சிறிது கடன் வாங்க நேரிடலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். ஆனால் அதுவும் நன்மைக்கே. மதிப்பு, மரியாதை  சீராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு  தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் தேவையற்ற மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப் பர். தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தொழில், வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும். யõரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியும். அரசிய ல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் அதிக  செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.  குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

 

2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறுகிறார். அவர் சாதகமான இடத்துக்கு வந்துவிட்டார். இதனால் கடந்த கால பின்தங்கிய நிலை இனி இரு க்காது. இந்நேரத்தில் ராகு-கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். ராகு நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் கேது சாதகமற்ற நிலைக்கு வ ருகிறார். இந்த சமயத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில்

முறியடிப்பீர்கள். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் புதிய  வாகனம் வாங்கலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுபோகலாம் சற்று கவனம் தேவை. பணியில் கடந்த கால பிற்போக்கான நிலை மறையும்.  சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை  கிடைக்கும். பொருள் விரயத்துக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளின் தொல்லை வரலாம். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால்  வளம் காணலாம். புதிய தொழிலை தவிர்க்கவும். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள், பொதுநல ÷ சவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம்.  நெல், கோதுமை பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்  நலம் நன்றாக இருக்கும்.

 

2016ம் ஆண்டு நிலை பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். பணியில் இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை  உருவாகும். தொழில், வியாபாரத்தில் சிலர் ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். போட்டியாளர்களால் இடையூறு வரலாம். புதிய முதலீடு  விஷயத்தில் அதிக கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.  மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. பி ள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

 

2017 ஜூலை வரைகுடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அதேபோல் அக்கம்பக்கத்தாரிடமும் அனவாசிய பேச்சை தவிர்க்கவும். பணிய õளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.  தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஒருவித மந்த நிலை இருக்கும். அலைச்சல் கூடும். போட்டியாளர்களால் வரும் எந்த பிரச்னையையும்  சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் ஓரளவு பலன் காண்பர். மாணவர்கள்  விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

 

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு

காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம். எனினும், குருவின் பார்வை கை கொடுக்கும். பணியாளர்கள் சிலர் வேலையில்  ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருபிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின்  இடையூறு அவ்வப்போது தலைதுõக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை  கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். விவசாயிகளுக்கு நிலம்  தொடர்பான வழக்கு விவகாரங்களில் பாதகமான தீர்ப்பு வரலாம். பெண்கள் திருப்திகரமாக

வாழலாம். குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும. ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்!

காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். நரசிம்மர் வழிபாடும், பைரவர் வழிபாடும் தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும்.  சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சனிக்கிழமை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை  வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வாருங்கள்.

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)  40/100

71/2 யிலே இதெல்லாம் சாதாரணமப்பா!

பெற்றோர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

 

 உங்கள் சாதுரியத்தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு துரோகம் செய்தவர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டீர்கள்.  தற்போது உங்களுக்கு சனிபகவான் நல்லது தரும் காலம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே சனி பகவானால் நீங்கள் எண்ணற்ற இடர்ப்பாடுகளை சந்தித்து வந்திருப்பீர்கள். குறிப்பாக பொருள் நாசம், வீண்அலைச்சல்,  செயல்களில் தடை, மனஉளைச்சல் போன்ற இன்னல்களைக் கண்டிருக்கலாம். இப்போது சனிபகவான் 12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம். அதற்காக கவலை கொள்ள ÷ வண்டாம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் மூன்று ஆண்டு காலமும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படலாம், உறவினர்கள் வகையில்  வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. எனினும், இவற்றைக் கண்டு பயம் வேண்டாம். மற்ற கிரக ங்களால் நன்மை கிடைக்கும். சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களைப் பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம்  இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில்  மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.

 

2015 டிசம்பர் வரை குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு  மறையும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். தம்பதியிடையே சிற்சில ஊடல்கள் வரத்தான் செய்யும். நீண்ட  காலமாக தடைப்பட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.   தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம்.  கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர்.  அரசியல்வாதிகள் பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தேக்கநிலை இருக்காது. விவசாயம் நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக  மகசூல் கிடைக்கும்.  பெண்கள் சாதுரியத்தால் அதை எளிதில் முறியடித்துவெற்றி காண்பீர்கள்.

 

2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு சாதகமற்ற நிலைக்கு வருகிறார். முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்கான கவலை  கொள்ள வேண்டாம். இப்போது சனியின் 3-ம் இடத்துப்பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப  நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பணியாளர்கள் கடந்த காலம் போல உன்னதமான பலனை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், போலீஸ் மற்றும்  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு வளர்ச்சி சீராக இருக்கும். புதிய  வியாபாரம், தொழில் தற்போது துவங்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.மாணவர்கள் அதிக  முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலை தரும். பெண்கள் பிள்ளைகளால்  பெருமை காண்பர்.

 

2016 டிசம்பர் வரைகுரு சாதகமான இடத்துக்கு வந்து விடுவார். இதனால், சனியால் ஏற்பட்ட கடந்த கால பின் தங்கிய நிலை இனி இருக்காது. இப்போது ராகு-கேது பெயர்ச்சி அடைகிறார்கள். அவர்களால் பெரிய அளவு நன்மை தர இயலாவிட்டாலும் குரு வால் பலன்கள் மாறுபடும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும்  அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.  தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சலும், பளுவும் இருக்கும். பொருள் விரயத்துக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொழில், வியாபாரம் துவ ங்குவதைத் தவிர்க்கவும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். அரசிய ல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். விவசாயத்தில் நல்ல  வளம் காணலாம். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள்  வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல் நலத்தில் பிரச்னைவரும். பயணத்தின் போது கவனம் தேவை.

 

 2017 ஜூலை வரைஇப்போது குரு 12-ம் இடத்துக்கு வந்துவிட்டதால் அவரும் நன்மை தரமாட்டார். முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலகட்டம். இந்த நிலையில் ஏழரையைச் சமாளிக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டும். எடுத்த காரியத்தை  முடிக்க அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண வேண்டும். பணவரவுக்கு தகுந்தாற்போல் செலவும்  இருக்கும். பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் காரணமாக  குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். வியாபாரம், தொழிலில் புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒ ப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் முயற்சி  எடுத்து படிக்க வேண்டும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. உஷ்ணம், தோல், தொடர்பான பிரச்னை  வரலாம்.

 

2017 டிசம்பர் வரை இந்த சமயத்தில் கேதுவால் எண்ணற்ற நன்மைகளை காணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சி கரமாகவும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம்.. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும்.  பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.வியாபாரத்தில் அரசின் வகையில் எதிர்பார்த்த  உதவி கிடைக்கும். கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோயில் மற்றும் ஆன்மிகம் சார்ந்த தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும். கலைஞர்கள் புதிய  ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவை வரும். அரசியலில் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.  மாணவர்கள் கடந்த ஆண்டு படித்த படிப்புக்கான முழு பலன்களும் இப்போது கிடைக்கும். விவசாயிகள் சிறப்பு காண்பர். நெல், கோதுமை,  பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.  தீர்ப்புகள் சாதகமாக அமையும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களின்  நிலை உயரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரு ம்புவர். பிள்ளைகள் நலம்  மேம்படும். ஏழரையில் கடைசி ஆறு மாதங்கள் நல்ல காலமாகவே இருக்கும்.

 

பரிகாரம்!

 

சனீஸ்வரர் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அவரால் கெடு பலன்கள் ஏற்படாமல் இருக்க ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாரு ங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தையும், ÷ கதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)    45/100

பாத்துட்டார் பாத்துட்டார் ஐயையோ பாத்துட்டார்!

கொண்ட குறிக்கோளில் சிறிதும் தவறாமல் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே!

 

நீங்கள் பிறரது குற்றங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறன் கொண்டவர்கள். சனிபகவான் இதுவரை 11ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மை  தந்தார். செய்தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருந்திருக்கும். பொன், பொருள் என வா ங்கி இருப்பீர்கள். இப்போது சனிபகவான் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை எதிர்பார்க்க  முடியாது. ஏனெனில், உங்கள் மீது அவரது பார்வை பட்டு விட்டது. புரிந்து கொண்டிருப்பீர்கள்! அதாவது ஏழரை சனி உங்களுக்கு ஆரம்பித்து  விட்டது. சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு  அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு.இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7ம்  இடத்து பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை  எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். இது தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு வும், ராகுவும் அவ்வப்போது நன்மை தருவார்கள். மேலும் விரைவாக சுழலும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்களும்  இடையிடையே நற்பலனை கொடுக்க தவறமாட்டார்கள். அந்த வகையில் மற்ற முக்கிய கிரகங்களின் நிலையை சற்று காண்போம்.

 

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் வரலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே  வீண்விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார இழப்பு வரலாம். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.  உறவினர்கள் வகையில்  அனுகூலமான போக்கு காணப்படும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  தொழிலதிபர்கள், வியாபாரிகள் எதிலும்  அசட்டையாக இருக்க வேண்டாம்.  அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில், வியாபாரம் தற்போது தொடங்க ÷ வண்டாம். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். அரசிய ல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெற அதிக பிரயாசைப் பட நேரிடும். விவசாயி கள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.  பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். ÷ வலைக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பளுவைச் சுமக்க வேண்டி வரும். உடல்நல பாதிப்பு வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

 

2015 ஜூலை 4ல், குருபகவான் சிம்மத்திற்கு மாறி நன்மை தருவார். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அனைத்தும்  அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை  புகழ்வர்.குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபங்கள் கைகூடும். வீடு, மனை வா ங்கும் யோகம் கூடி வரும். பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலைப்பளு குறையும். விரும்பிய இடத்துக்கு மாற்றம்  கிடைக்கப் பெறலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசின் உதவி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறப்பெற்று முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம்.  விவசாயிகளுக்கு நெல், கோதுமை, கேழ்வரகு பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். பெண்கள் மகிழ்ச்சி  பொங்க காணப்படுவர். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டி வரும்.

 

 2016ம் ஆண்டு நிலைமுக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சனிபகவானின் 7-ம்  இடத்துப் பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும். இந்த காலத்தில் ராகு கன்னியில் இருந்து சிம்மத்திற்கும், கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கு  மாறுகின்றனர்.கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் ராகு சாதகமற்ற நிலைக்கு வருகிறார்கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.  பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.  பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அதிக நன்மை உண்டு.  தொழிலதிபர்கள், வியாபாரிகள் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப்  பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

 

2017 ஜூலை வரைகுடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வ ருவீர்கள். வேலையில் கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். கலைஞர்கள் மிகச்சிற ப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல் நலம் நன்றாக இ ருக்கும்.

 

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வாகன சுகம் ஏற்படும். சிலரது வீட்டில்  பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. நகைகளை பாங்கில் வைக்கவும். ஏற்கனவே பணி இழந்தவர்கள் முயற்சி செய்தால் இழந்த பதவியை  மீண்டும் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆ லோசனையுடன் முன்னேற்றம் காணலாம். வாடிக்கையாளர்கள் அனுகூலமாக இருப்பர். வெளியூர் பயணம் சிறப்பை தரும். வேலை இன்றி இருப் பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஆனால், உங்கள் பெயரில் துவங்காமல்  வீட்டில் உள்ளவர்கள் பெயரில் ஆரம்பிக்க   வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  கலைஞர்களுக்கு சான்ஸ் பெற கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். எனினும், கடந்த கால உழைப்புக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். அரசிய ல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடங்களைப் பெறுவர். விவசா யம் சிறப்பாக நடக்கும். நெல், கோதுமை, கொண்டை கடலை, கேழ்வரகு சிறப்பான மகசூலைக் கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இரு க்கும். ஆனால், புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் சிறப்பு பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவைச்  சுமக்க வேண்டியது இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

 

பரிகாரம்!

ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள்.  பத்ரகாளிக்கு தீபம் ஏற்றுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மாலை  அணிவித்து வழிபடுங்கள். திருச்செந்துõர் சென்று வரலாம். ஏழரை சனிகாலம் எனவே சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.  விநாயகர் மற்றும் ராமர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)  75/100

11ல் வந்திருக்கார்! பக்க பலமாய் துணையிருப்பார்!

தன்னம்பிக்கை கொண்ட மகர ராசி அன்பர்களே!

 

நீங்கள் மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள். எந்த வகையிலும் அவர்களின் ஆலோசனையை கேட்கத் தவற மாட்டீர்கள். கடந்த பல  ஆண்டுகளாக சனிபகவான் பல்வேறு இன்னல்களையே தந்திருப்பார். குறிப்பாக, அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும், தொழிலில் மந்த நிலையையும் கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்காது. ஆனாலும், கடந்த சில மாதங்களாக குருபகவானும், கேதுவும் உங்களுக்கு நன்மை தந்து உங்களை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சனிபகவான் இப்போது 11-ம் இடத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.

 

2015ம் ஆண்டு நிலைஉங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். உ ங்கள் செல்வாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நீண்ட காலமாக  எதிர்பார்த்த பொருளை வாங்கி மகிழலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து, விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.பணியாளர்களுக்கு சம்பள உயர்வு முன்பை விட அதிகமாக கிடைக்கும். வியாபாரிகள், தொழிலதிபர்கள் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளம்பெறச் செய்வர். கலைஞர்களுக்கு நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் மந்த நிலை மாறும். நற்கல்வி பெறுவர்.  விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும்.  பெண்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். உடல்நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

 

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்ற இடத்துக்கு சென்றுவிட்டாலும், அவரது 7-ம் இடத்துப்பார்வை  சாதகமாக அமையும்.அந்த பார்வையால் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். செலவும் வரும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். எனினும், மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும் என்பதால், வீண்விவாதங்களை தவிர்க்கவும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்களுக்கு குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.  உடல் நலம் சிறப்படையும்.

 

2016ம் ஆண்டு நிலை அக்கம் பக்கத்தினர் உங்களைப் புகழ்வர். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ÷ தவைகள் பூர்த்தி ஆகும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். கேதுவால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில்  தொல்லை வரும். தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. பணியாளர்களுக்கு விரும்பிய இடத்துக்கு  மாற்றம் கிடைக்கப் பெறலாம்.வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று முன்னேற்றம் காணலாம்.  மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இரு க்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும்.

 

 2017 ஜூலை வரைமுக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வீட்டில் சிற்சில பூசல்  வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம். பணியாளர்கள் கடந்த காலம் போல  உன்னதமான பலனை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் புதிய வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி  எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு நிலக்கடலை  மற்றும் கிழங்கு நல்ல மகசூலை தரும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது. பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

 

2017 டிசம்பர் வரைகுடும்பத்தில் திருட்டு பயம் மறையும். தம்பதியினர் இடையே கேது, ராகுவால் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை  சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். அதே நேரம் உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்னை இனி இருக்காது. அதோடு அவர்கள் வருகையும்,  அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளிடம்  அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். புதிய வி யாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். பணவிரயம் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய் யும். கவனம் தேவை. தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம்.  பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம்! உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிபட  வாய்ப்பு உண்டு. எனவே முன்பின் தெரியாதவர்களிடம் எதையும் ஒப்படைக்க வேண்டாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். ஆனால், அதற்காகசற்று சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை  எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் மதிப்பெண் கிடைக்கும். விவசாயம் சீராக இரு க்கும். மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சுமராக இரு க்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில  உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.

பரிகாரம்!

சித்திரபுத்திரநயினாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை யும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரையும் வணங்கி வாருங்கள். தினமும் விநாயகர், துர்க்கை, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.  ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 55/100

வந்தார் இருந்தார் போனார் என இருப்பாரா!

பிறரின் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கும் தன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

 

இது வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்தார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் உங்கள் முயற்சியில் பல்வேறு ÷ தால்விகளை தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் அதிகம் ஏற்பட்டு இருக்கும். சிலர் எதிரிகளுக்கு அடங்கி போய் இருப்பர். உறவினர்கள்,  நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகி அது பகையாகக் கூட மாறி இருக்கும். இந்த நிலையில் இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம்  இடத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்து வந்த தடைகள்  அகலும். ஆனால், தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள்  லேசாக நோகச் செய்யலாம். இதுவெல்லாம் சனி 10-ம் இடத்தில் இருக்கும் போது தரும் பொதுவான பலன்கள். அதற்காகக் இதை கண்டு நீங்கள்  அச்சம் கொள்ள வேண்டாம். வேறு கிரகங்கள் அவ்வப்போது நன்மை தர காத்திருக்கின்றன. சனியைத் தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு, ராகு,  கேது ஆகியவற்றின் நிலை மற்றும் மாற்றங்களையும் சற்று கவனிக்க வேண்டும்.

 

2015ம் ஆண்டு நிலை எந்த முக்கிய கிரகமுமே சாதகமான இடத்தில் இல்லை. ஆனாலும், குருவின் 9-ம் இடத்து பார்வை உங்களுக்கு மிக சிறப்பாக  அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதற்காக அது முன்பு போல்  இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் தம்பதியி னரிடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகும்.பணியாளர்கள் மேல்  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். ஆரம்ப காலத்தில் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக முன்÷ னற்றம் தருவதாக அமையும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். தீயோர் சேர்க்கைக்கு  ஆளாகி அவதியுறலாம். எனவே அவர்கள் வகையில் எப்போதும் கவனமாய் இருக்கவும். சனி பகவான் அவப்பெயரையும் தருவார். சிலர்  பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம்.  அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண  முடியும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனம் தேவை. விவசாயிகளுக்கு மானாவாரி நிலத்திலும்  நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப் பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலத்தில் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

 

குரு 2015 ஜூலை மாதம் 4-ந் தேதி அன்று சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக  உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும்  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே  அன்னியோனியம் கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த  பிரச்னைகள் மாறி ஒற்றுமை ஓங்கும்.

 

பணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ÷ வலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் வெற்றி  அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். கலைஞர்களுக்கு  பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு சிறப்பாக அமையும்.  வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம்.  பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். 2016ம் ஆண்டு நிலை குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும்  அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டிருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பணவரவு கூடும். ÷ தவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் குதுõகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியில் சற்று முயற்சி எடுத்தால் ÷ காரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். நண்பர்கள் என்ற போர்வையில் விரோதிகளும் வர  வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை பாராது பணி  செய்ய வேண்டி வரும். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கையில்  நல்ல மகிழ்ச்சியைப் பெறுவர். உடல் நலம் சிற ப்படையும். பிள்ளைகள் உடல்நலம் மேம்படும்.

 

2017 ஜூலை வரை தடைகள் அகலும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களைப்  புகழ்வர்.மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைப் புரிந் துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம்  நடக்க வாய்ப்பு உண்டு.  வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணியில் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு அரசின் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள்  சிறப்பாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர்.

 

2017 டிசம்பர் வரைராகு பல்வேறு முன்னேற்றங்களைத் தருவார். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொரு ளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும். பணியில் சீரான நிலை இருக்கும். சக ஊழியர்கள்  உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்சல் இருக்காது. தொழிலதிபர்கள், வியாபாரிகள் கடந்த போட்டியாளர்களின் பிடியிலிருந்து விடுபடுவார்கள்.  தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் நிவாரணம் பெறுவர். இதனால் வீண்விரயம் தடைபடும். கலைஞர்கள்  பிரச்னைகளின்றி முன்னேறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவிஷயத்தில் தேவைகள் பூர்த்தி அடையும். மாணவர்கள்  ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பர். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான  நிலைக்கு செல்வர். விவசாயிகள் எள், கரும்பு, உளுந்து மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.  பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சீராக  இருக்கும்.மொத்தத்தில் சனீஸ்வரர் வந்தார் இருந்தார் போனார் என்ற சுமாரான நிலையே இந்தப் பெயர்ச்சி காலத்தில் இருக்கும். இப்படி இருந்தாலே  ஓரளவுக்கு நல்ல விஷயம் தானே!

பரிகாரம்!

நவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்திஆசி பெறுங்கள். வசதி படைத்தவர்கள் ஏழைகள் பிழைக்க பணம்  கொடுத்து உதவி செய்யலாம். விநாயகரையும் , ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். முருகன்

கோயி லுக்கு சென்று வாருங்கள்.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 65/100

நெஞ்சம் மறப்பதில்லைஅது நினைவை இழப்பதில்லை!

எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்  மீன ராசி அன்பர்களே!

இது வரை சனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து பல்வேறு இடர்பாடுகளை தந்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் தம்பதியினரிடையே கருத்து ÷ வறுபாடு வந்திருக்கலாம். இதனால் அவர்களிடையே விரிசல் ஏற்பட்டு பிரியும் நிலையும் வந்திருக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகி இருக்கும். உங்கள் முயற்சிகளில் தடைகள் வந்து, நீங்கள் நினைத்ததை செய்ய முடியாமல் போய் இருக்கலாம். மருத்துவச்செலவு வந்திருக்கலாம். இந்த பிரச்னை மட்டுமோடு நின்று இருக்காது. கடந்த சில காலமாக மற்ற முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் நெஞ்சம் நிறைய நினைவுகளைச் சுமந்து கொண்டு இருப்பீர்கள். அதனை மறக்கமுடியாமலும் தவித்துக் கொண்டு இருப்பீர்கள்.  இந்த நிலையில் சனி பகவான் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், இதற்கு முன்பு போல் கெடுபலனைத் தர மாட்டார். பழைய சிரமமான நினைவுகளில் இருந்து விடுபட ஆரம்பிப்பீர்கள். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, முயற்சிகளில் தடைகள் வரலாம். எதிரிகளின் இடையூறு தலைதுõக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த கெடுபலன்கள் அப்படியே நிகழும் என்று எண்ண வேண்டாம். கோட்சார பலனைக் கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மற்ற கிரகங்கள் மூலம் அவ்வப்போது நன்மை கிடைக்கும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.

 

2015ம் ஆண்டு நிலைகுடும்பத்தில் உறவினர்கள் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். வி ருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரு ம்.பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.  வியாபாரிகள் மன நிம்மதி ஏற்படும். சனியால் பளு அதிகரித்தாலும் அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. பெண்களை பங்குதாரர்களாக கொண்ட தொழில், வியாபாரம் தழைத்து ஓங்கும். கலைஞர்கள் சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க பெறுவர். மாணவர்கள் அயல்நாடு சென்று படிப்பீர்கள்.  விவசாயிகள் கால்நடை செல்வங்கள் பெருகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.  குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். குழந்தை பாக்கியம் பெற்று அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பொருத்தம் கைகூடும்.

 

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது உங்கள் ராசிக்கு 6-ம் இடம். இந்த சமயத்தில் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக அமைய வில்லை. அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை சாதகமான அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இ ருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிற ப்பாக முடிக்க முடியும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பணியாளர்களுக்கு ÷ வலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில்  போதிய லாபம் கிடைக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில், வியாபாரம் தற்÷ பாது வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பின் தங்கும் நிலை ஏற்படலாம். விவசா யத்தில் அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகஇருக்கும்.கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

 

2016ம் ஆண்டு நிலைகுரு சாதகமான இடத்துக்கு வந்து விடுவார். ராகுவாலும் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.  குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை  ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள்  திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். வியாபாரம், தொழிலில் தீயோர் சேர்க்கையால்அவதியுற்றவர்கள்  அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.  மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும்   கைக்கு கிடைக்கும். பெண்கள், குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.கேதுவால்  பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.

 

2017 ஜூலை வரைஇந்த காலகட்டத்தில் செலவும் வரும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.  குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தொழில்  தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்களுக்கு இந்த கல்வி  ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க  வேண்டி வரும். உடல் நலம் மட்டுமின்றி மனத்தளர்ச்சியும் ஏற்படும்.

 

 2017 டிசம்பர் வரைகேதுவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின் தொல்லையில் சி க்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். சனிபகவான் சாதகமற்று இருப்பதால் பெரியோர்களின் ஆ லோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை.  பணியில் இடமாற்றப் பீதி சிலருக்கு வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம்  காணலாம். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் சென்று  வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. கலைஞர்கள் புதிய ஒ ப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற அதிக முயற்சி மேற்கொள்ள  வேண்டி வரும். மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம்  காணலாம். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.  அக்கம்பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவை சந்திப்பர். உடல்நல உபாதைகளால் அவதி ப்பட்டவர்கள் குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.

 

பரிகாரம்!

சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர்  வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். அஷ்டமி  நாளில் பைரவரை வணங்கி வாருங்கள்.

PGM_870_12450278

Leave a Reply