வெண்கலப்பதக்கம் வென்றார் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ: முதல்வர் வாழ்த்து!

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் எம்எல்ஏ வெண்கல பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் இந்தியாவின் சார்பில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ஈ. ராஜா பங்கேற்றார்

இந்த போட்டியில் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்ததை அடுத்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

எம்.எல்.ஏ 140 கிலோ எடை பிரிவில் ராஜா எம்எல்ஏ பதக்கம் பெற்றார் என்பதும் இதனை அடுத்து தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்றெல்லாம் குறிப்பிடத்தக்கது.