shadow

கெளரவ கொலையால் கணவனை இழந்த இளம்பெண்ணின் கண்ணீர் கவிதை

கெளரவ கொலையால் திருமணமான ஒரே வருடத்திற்குள் கணவனை பறிகொடுத்த உடுமலை கெளசல்யாவை யாரும் மறந்திருக்க முடியாது. கெளசல்யாவின் குடும்பத்தினரே ஜாதி வெறியால் அவரையும் அவரது கணவர் சங்கரையும் பட்டப்பகலில் சரமாரியாம வெட்டினர். இந்த சம்பவத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் என்பதும், கெளசல்யா படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கெளசல்யா இன்று தனது இரண்டாவது திருமண நாள் என்று கூறி ஒரு கண்ணீர் கவிதையை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதுதான்:

இந்நாள்!

அம்மாவின் சாயலைக் கொண்டவளென்று-எம்மைக் கண்டதும் கூறினாய்!

அதற்கு நான்,

பொதுவான வார்த்தைகளிட்டு-பொருத்தமாக இருக்காதென்றேன்.

நீ கண்ணியமாக-என்னைவிட்டு கலைந்து சென்றாய்!

“சிறு இடைவெளியோடு”

மறுமுறை உனதுபேச்சு- “மன்னிப்பிலிருந்தது”

நீ தவறு செய்துவிட்டாய்-என்பதற்காக “அல்ல”

நான் உனது – “தாய்மை” எண்ணத்தை -“தவறாக” -நினைத்திடாது இருப்பதற்கா!

நீகடந்த

அந்நிமிடமே தாமதம்-இன்றும் காரணமில்லை-“என்னிடம்”

உனது நினைவிற்கு மாறாகத்தான்-நினைத்தேன்.

உண்டான இடைவெளியை-நமக்குள்-ஏனின்னும் உடைக்கவில்லையென்று!

கல்லூரி நண்பன்-என்றெனது-காதல் கணவனாவான் -எனநினைத்தேன்!

நாம் நினைத்தது-நிறைவேறியது-நாம்

நினைத்தவைகள்-நிறைவேறவில்லை!

நமது காதல்-நாமறிந்து-

பாராட்டிக்கொண்டபோது

நமது காதலை – எமது வீடறிந்து விட்டது.

“சாதி-சனத்தை” மனதில் நிறுத்தி

வழக்கம்போல்-எம்மைப் பெற்றவர்கள்-தன்வேலை பார்கையில்!

நமக்கான- கால இடைவெளி ஏதுமின்றி-இரு கரம்கோர்த்தோம்.

சாதியையும் உடைத்தோம்!

உடைந்த சாதியை-இணைக்க “எண்ணி”

எண்ணற்ற கனவுகளோடு-

எதிர்காலம் நோக்கி

ஊடலும்,கூடலுமின்றி-இணைந்திருந்த நம்மை,

பிரித்து வைத்துவிட்டார்கள்-மரணப்பரிசு கொடுத்து.

உன்னை-எம்மிடமிருந்து-என்னை உம்மிடமிருந்து.

ஆனால்?

நமது மனமும்-மனதின் நினைவும்-எவராலும்- பிரித்திட இயலாதவையடா

எனது மனவாளா!

ஈருயிராக இருந்தது இன்று-ஓருயிராகிவிட்டது.

சாதியைச் – சவக்குழியேற்றுவேனென்று

உன்மேல் உறுதியெடுத்துக்-கூறுகிறேன்.

இன்று நமது இரண்டாமாண்டு-

“மணநாளடா”

Leave a Reply