சாதாரண மனிதர்கள் செய்யும் ஒரு குற்றத்திற்கு தண்டனை கிடைத்தால் அவர்கள் விடுதலையாகும் வரை வெளியே வர அனுமதிப்பதில்லை ஜெயில் நிர்வாகம். ஆனால் அதுவே பணம் உள்ளவர்கள் பெரிய தவறு செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றால் அவர்களுக்கு ஜெயிலில் ராஜமரியாதை கிடைப்பதோடு, அடிக்கடி பரோலில் வெளியே வந்து ஜாலியாக இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு நடைமுறைதான் தற்போது சஞ்சய்தத் விஷயத்தில் நடந்து வருகிறது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கபட்டு சிறைதண்டனை பெற்ற சஞ்சய்தத் தீர்ப்பு வெளியான பிறகு இதுவரை ஜெயிலில் இருந்த நாட்கள் 189 நாட்கள்தான்.ஆனால் இடையிடையே பரோலில் அவர் வெளிவந்த நாட்கள் 118. ஒவ்வொரு முறையும் அவர் பரோலில் வெளியே வர அனுமதி கேட்கும்போது ஜெயில் அதிகாரிகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. உடனடியாக அவருக்கு மட்டும் அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆனால் சாதாரண பிரஜை ஒருவர் தண்டனை காலம் முடியும்வரை வெளியுலகை பார்ப்பதே இல்லை.

சஞ்சய்தத்துக்கு தொடர்ச்சியாக மூன்று முறை பரோலில் வெளியே வர அனுமதி கொடுத்திருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.

Leave a Reply