மாணவர்களுக்கும் சானிடரி நாப்கின்: இதில் கூட ஊழலா?

பீகார் மாநிலத்தில் மாணவியர் மட்டுமின்றி மாணவர்களுக்கும் சானிட்டரி நாப்கின் கொடுத்து இதிலும் ஊழல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தில் ஒரு மாணவிக்கு சானிட்டரி நாப்கின் வாங்க ஒரு ஆண்டுக்கு 150 ரூபாய் அரசால் அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த திட்டத்தில் மாணவிகள் மட்டுமின்றி சில மாணவர்களுக்கும் சானிடரி நாப்கின் கொடுத்ததாக ஊழல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரை அடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது