shadow

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லூசி ஹரடெக்ஸ்கா ஆகியோர் செர்பியா மற்றும் ஜப்பான் வீராங்கனைகளை எதிர்த்து விளையாடினார்

இந்த போட்டியில் சானியா-லூசி ஹரடெக்ஸ்கா ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றனர்.

இந்த வெற்றியை அடுத்து சானியா மிர்சா – லூசி ஹரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது