shadow

சீன ஓபன் டென்னிஸ்: சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
sania
சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தற்போது சீன ஓபன் டென்னிஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற  சீன ஓபன் டென்னிஸ் தொடர் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தைபேய் நாட்டின் ஹா சிங் சன் – யங் ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டு, 6-7 (9), 6-1, 10-8 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆண்டு மட்டும் இந்த ஜோடி கைப்பற்றும் 8-ஆவது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இந்தியன் வெல்ஸ், மியாமி, சார்லெஸ்டன், விம்பிள்டன், யு.எஸ். ஓபன், குவாங்ஜு, உஹான் மற்றும் தற்போது சீன ஓபன் ஆகிய 8 தொடர்களில் தங்களது வெற்றி முத்திரையை சானியா – ஹிங்கிஸ் ஜோடி பதித்துள்ளது. கடைசி நான்கு தொடர்களின் 17 ஆட்டங்களில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி 2 செட்களை மட்டுமே இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply