35 வயதில் சானியா மிர்சா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

35 வயதான சானியா மிர்சா தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார் என்பதும், சமீபத்தில் நடந்த மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா மிர்சா தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.