shadow

உறுதியானது விஷாலின் ‘சண்டக்கோழி 2’
sandakozhi2
கடந்த 2005ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென அல்லு அர்ஜூன் படத்தை லிங்குசாமி இயக்குவதாக கூறியதால் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.  

இந்நிலையில் ‘சண்டக்கோழி 2’ படத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விஷாலும் லிங்குசாமியும் சமாதானமாகிவிட்டதாகவும் விஷால் தற்போது நடித்து வரும் ‘கத்திச்சண்டை’ படம் முடிந்ததும் ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கும் யுவன் தான் இசையமைத்தார் என்பது குரிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply