டிசம்பர் 2 முதல் புதுடில்லி-சான்பிரான்சிஸ்கோ நேரடி விமானம். சென்னை பயணிகளுக்கு புதிய வசதி
சென்னையில் இருந்து அமெரிக்காவின் முக்கிய நகரமான சான்பிராசிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்ல ஏர் இந்தியா நிறுவனம் வழிவகை செய்துள்ளது. இதன்படி வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் புதுடில்லியில் இருந்து சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு முதல்முறையாக நேரடி விமானம் ஒன்று இயக்கப்படவுள்ளது. இந்த விமானத்தில் செல்ல விரும்பும் சென்னை பயணிகளுக்காக விமானம் கிளம்பும் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து புதுடில்லி செல்ல ஏஐ043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.