shadow

சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.6650 கோடி திடீர் இழப்பு.

2உலக ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலை இந்தியர்கள் உள்பட உலகின் பல நாட்டினர் விரும்பி வாங்கினர். ஆனால் ‘கேலக்சி நோட் 7’ மாடல் வாங்கிய பலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது போனுக்கு ரீசார்ஜ் செய்யும்போது அடிக்கடி போன் தீப்பற்றி எரிகிறது என புகார் கிளம்பியது.

ஒட்டுமொத்தமாக விற்பனையானதில் மூன்று டஜன் போன்கள், அதாவது 0.1 சதவீத போன்கள் குறித்து புகார் வந்தது. மேலும், சமூக வலைத்தளத்தில் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தரப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

இதனால் ‘கேலக்சி நோட் 7’ போன்களை திரும்பப் பெற்றுக்கொள்ள சாம்சங் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘கேலக்சி நோட் 7’ போன்களை திரும்பப்பெற்றால், சாம்சங் நிறுவனத்திற்கு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 6650 கோடி ரூபாய்) சாம்சங் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும். அந்த நிறுவனத்திற்கு நினைத்துப் பார்க்க முடியாது பெரிய இழப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

Leave a Reply