இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் கண்ணன் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலையிலும் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

சாமியார் கண்ணனின் கள்ளக்காதலிதான் யமுனா. இவரது கணவர் தங்கவேலுவை கொலை செய்ததை யமுனா போலீசில் கூறினார். இதோடு மட்டுமல்லாது சத்யா, செல்வகுமார் என்ற வாரிசுகளையும் கண்ணனும், யமுனாவும் கொலை செய்ததும் போலீஸ் வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கவேலு வைரவியாபாரி. யமுனாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை தன் வசப்படுத்த முதலில் வைரவியாபாரி மனைவி யமுனாவை தன் வசப்படுத்தியுள்ளார் சாமியார் கண்ணன். குறிசொல்பவர் போல் வீட்டுக்குள் நுழைந்து குடியைக் கெடுத்து விட்டான் கண்ணன் என்று யமுனா அன்று போலீசில் கூறியிருந்தார். இந்நிலையில், சாமியார் கண்ணன், கூட்டாளி சரவணன் ஸ்ரீரங்கம் கிராம அதிகாரி முன்பு சரணடைந்தனர். பின்பு இவர்கள் சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply