இந்தியா , ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 2,1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எஞ்சியுள்ள 4 போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது.

நடப்பு தொடரில், இந்திய பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததால் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே 15 வீரர்களே அணியில் நீடிப்பார்கள் என்று தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ஒருசில தோல்விகளுக்காக முன்னணி பந்துவீச்சாளரை அணியில் இருந்து ஒரேயடியாக நீக்குவது தவறு. அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று இஷாந்த் ஷர்மாவுக்கு ஆதரவாக கேப்டன் டோனி குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், வினய் குமார், அமித் மிஷ்ரா, ஜெய்தேவ் உனத்காட், முகமது ஷமி.

Leave a Reply