shadow

‘விஜய் 61’ படத்தில் இருந்து சமந்தா நீக்கமா?

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள ‘விஜய் 61’ படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சமந்தா இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் நடிக்கவுள்ளதாகவும் டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று சமந்தாவுக்கும் அவருடைய காதலர் நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாலே அவர் ‘விஜய் 61’ படத்தில் இருந்து தூக்கப்பட்டதாக வதந்திகள் உலவி வருகின்றன.

மேலும் இந்த படம் இருவேறு காலங்களில் இருக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் 1980களின் படக்காட்சிகள் மதுரையிலும், தற்போதைய கால படக்காட்சிகள் வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *