shadow

இளவரசி ஆகிறார் நடிகை சமந்தா: ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகை சமந்தா முதல் முறையாக இளவரசி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்

அந்த வகையில் ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடிக்கும் படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தில் அவர் இளவரசி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆயுஷ்மான் இந்த படத்தில் காட்டேரி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இளவரசிக்கும் காட்டேரிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.