உயிர் வாழ்வதற்கு பரிட்சை ரொம்ப முக்கியமா? பிரபல இசையமைப்பாளர்

பிளஸ் டூ தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்று தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் இன்று பரீட்சை எழுதி வரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஒரு கடையின் முன் அட்டையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அடேய் பசங்களா…. உயிர் வாழ்வதற்கு தேவையான அளவிற்கு முக்கியமான விஷயம் அல்ல பரீட்சை. ஜாலியா எழுதுங்கடே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

சாம் சிஎஸ் பதிவு செய்துள்ள இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply