அஜித்தின் ‘விசுவாசம்’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர்?

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர்?

தல அஜித் நடிக்கும் 58வது படமான ‘விசுவாசம்’ படத்தை மீண்டும் இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி கடந்த சில நாட்களாக எழுந்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா அல்லது அனிருத் ஆகிய இருவரில் ஒருவர் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ், விசுவாசம் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சாம் சி.எஸ் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இந்த படத்திற்கு நான் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்படுவேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நான் ஒரு மிகப்பெரிய தல ரசிகர். இந்த படத்திற்கு இல்லாவிட்டாலும் விரைவில் தல அஜித் படத்திற்கு இசையமைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் விருப்பமுள்ள அஜித், இந்த படத்தில் இசையமைக்க சாம் சி.எஸ்-க்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply