தேவையான பொருள்கள்:
ஃப்ரெஷ்ஷான மஷ்ரூம் – 250 கிராம்,
கார்ன்ஃப்ளார் – மைதா – தலா 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிது,
பொடித்த இஞ்சி, பூண்டு –  தலா 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய செலரி தழைகள் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப,
சிவப்பு மிளகாய் விழுது (சிவப்பு மிளகாயை வேக வைத்து, அரைத்தது) – சிறிது,
சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் – சிறிது,
சில்லி ஃப்ளேக்ஸ் (தேவைப்பட்டால்) – சிறிது,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
வெங்காயத் தாள் – சிறிது.

செய்முறை:
காளானை கழுவி, இரண்டிரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணெயில்  பொரித்துத் தனியே  வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்துப்  பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.
பிறகு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். குறைந்த தணலில் வைத்து, சோயா சாஸ்,  வெள்ளை மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
தேவையான  உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள காளான் சேர்த்துக் கிளறி, தேவைப் பட்டால் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, கடைசியாக வெங்காயத் தாள் தூவிப்  பரிமாறவும்.

Leave a Reply