தமிழகம் முழுவதும் சலூன் கடைகளைத் திறக்க உத்தரவு:

ஆனால் எங்கு மட்டும் தெரியுமா?

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் சலூன் கடைகளைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலானதில் இருந்து அதாவது சுமார் இரண்டு மாதங்களாக முடிவெட்டாமல் பலர் இருக்கும் நிலையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் சலூன் கடைகளைத் திறக்கப்படும் என்றும், ஆனால் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் கடை திறக்க தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாஸ்க், கையுறை அணிந்து முடி திருத்தம் செய்யவேண்டும் எனவும் சலூன் கடைக்காரரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply