shadow

ஹிலாரி கிளிண்டனுக்கு டுவிட்டரில் ஆதரவு கொடுத்த சல்மான்கான்

hilariஅமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க மற்றும் ஹாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

லியானார்டோ டிகார்பியோ, பியான்ஸ், கிம் கார்டாஷியன், கான்யே வெஸ்ட், கேட்டி பெர்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் டுவிட்டரில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்து வந்துள்ள நிலையில் இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், ஹிலாரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் ‘இந்த தேர்தலில் நீங்கள் வெல்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் வெற்றிக்கு கடவுள் துணணயிருப்பார். வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சல்மான் கானின் வாழ்த்தை அடுத்து அமெரிக்காவில் உள்ள அவரது ரசிகர்கள் ஹிலாரிக்கே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply