shadow

டிராபிக்கில் சிக்கி கொண்ட சாய்பல்லவி எடுத்த அதிரடி முடிவு

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை சாய்பல்லவி தற்போது தமிழில் பிசியான நடிகையாக உள்ளார். இவர் நடித்துள்ள முதல் தமிழ்ப்படமான ‘கரு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று சாய்பல்லவி ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென டிராபிக்கில் அவரது கார் சிக்கி கொண்டது. இந்த நிலையில் சரியான நேரத்தில் விழாவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ரசிகர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து விழா நடைபெறும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்றார்

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காக எளிமையாக பைக்கில் வந்து இறங்கிய சாய்பல்லவியை கண்ட ரசிகர்கள் வியப்படைந்தனர்

Leave a Reply