டெண்டுல்கர் 25 லட்சம், சாய்பாபா அறக்கட்டளை 51 கோடி: கொரோனா நிதி

டெண்டுல்கர் 25 லட்சம், சாய்பாபா அறக்கட்டளை 51 கோடி: கொரோனா நிதி

இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்து வரும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.

அந்த நடையில் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் 25 லட்ச ரூபாய் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது பங்காக அளித்துள்ளார்

அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூபாய் 51 கோடியை ஷிரடி சாய்பாபா அறக்கட்டளை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply