பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின், வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகிய இருவருக்கும் இன்று பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடக்க இருக்கும் மாளிகையில் பிரணாப் முகர்ஜி இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கிறார். விளையாட்டு துறையில் பாரத ரத்னா விருது பெறும் முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுகிறார்.

மேலும் பாரத ரத்னா விருது பெறும் மூன்றாவது விஞ்ஞானி என்ற பெருமையை பெறுகிறார் சி.என்.ஆர்.ராவ். இவர் 1400 கட்டுரைகளையும், 45 புத்தகங்களையும் எழுதியுள்ளார். இதற்கு முன்னர் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம், சர். சி.வி.ராமன் ஆகியோர் பாரத ரத்னா விருதை பெற்றுள்ளனர்.

Leave a Reply