சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: ஐயப்பன் கோயில் நிர்வாகம் திட்டவட்டம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: ஐயப்பன் கோயில் நிர்வாகம் திட்டவட்டம்

சபரிமலையில் ஆண்களை போல பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், வழிபாட்டு தளத்தில் பாலின வேறுபாடு இருக்க கூடாது என்றும் நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து இதுகுறித்த வழக்கின் விசாரணையின்போது கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் சபரிமலையில் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது என்றும் மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் வழக்கு விசாரணையின்போது ஐயப்பன் கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக இன்றைய விசாரணையின்போது கூறியுள்ளது.

வழிபாடு நடத்த ஆண்களை போல பெண்களுக்கும் உரிமை இருப்பதாக உச்சநீதிமன்றம் நேற்று கூறியிருந்த நிலையில் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Leave a Reply