திரைப்பட நடிகரும் நகைச்சுவை நாடக இயக்குனருமான எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
2006ஆம் ஆண்டு அதிமுக-வில் சேர்ந்த எஸ்.வி.சேகர் மயில்லாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு அதிமுக-விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார்.
பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் முன்பு அவர் பாஜகவில் இணைந்தார். தான் இப்போதுதான் சரியான கட்சியில் சேர்ந்திருப்பதாக எஸ்.வி.சேகர் கூறினார்.

Leave a Reply